“அரசியலில் வெத்து வேட்டாக உள்ளவர்கள் தம்மை காட்போட் வீரர்களாக காண்பித்துக்கொள்வதற்கு முற்படுகின்றனர். அஞ்சலி செலுத்துவதற்கும், ஊடகங்களுக்காக கண்காட்சி நடத்துவதற்கும் இடையில் வேறு பாடு உள்ளது.”
இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், வெளிவிவகார அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது விமல் வீரவன்ச விவகாரம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ விமல் வீரவன்ச பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்துள்ளார். அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்றம் ஊடாக உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
அஞ்சலி செலுத்துவதற்கும், குழப்பம் விளைவித்து ஊடக பிரச்சாரம் தேடுவதற்கும் இடையில் வித்தியாசம் உள்ளது.” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
