நுவரெலியாவில் கார் விபத்து – ஐவர் படு காயம்!

கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் லபுக்கலை வெஸ்டவோட் பகுதியில் இன்று (05.11.2022) காலை கார் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த சாரதி உட்பட 5 பேர் கடும்காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு மஹரகம பகுதியிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles