அரையிறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்

இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரில் பங்களாதேஷ் அணியை 5 விக்கட்டுக்களினால் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

சுப்பர் 12 சுற்றில் அரையிறுதிக்கான வாய்ப்பை தென்னாபிரிக்க அணி இழந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டி தீர்மானமிக்கதொன்றாக மாறியிருந்தது.

அதற்கமைய, குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 127 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து, 128 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 18.1 ஓவர்கள் நிறைவில் வெற்றி இலக்கை அடைந்தது.

இதன் மூலம் இந்திய அணியுடன் குழு 2இல் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் தகுதி பெற்றுள்ளது.

குழு 1இல் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles