முச்சக்கரவண்டிகளுக்கு எரிபொருளின் அளவு இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும்-எரிசக்தி அமைச்சர்

முச்சக்கரவண்டிகளுக்கு வாராந்தம் விநியோகிக்கப்படும் 5 லீட்டர் எரிபொருளின் அளவு இன்று நள்ளிரவு முதல் 10 லீட்டராக அதிகரிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்ஜன விஜேசேகர தெரிவித்துள்ளார்,

மேல் மாகாணத்தில் வாடகை அடிப்படையில் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளுக்கே இந்த எரிபொருள் அதிகரிப்பு வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

மாகாண போக்குவரத்து அதிகார சபை மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட முச்சக்கரவண்டிகளுக்கு மாத்திரமே இந்த எரிபொருள் அதிகரிப்பு செல்லுபடியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles