இரண்டு மாணவர்களுக்கு இடையில் மோதல்- ஒருவர் உயிரிழப்பு

அம்பாறை – திருக்கோவில் பகுதி, பாடசாலையொன்றில் இரண்டு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

13 வயதான மாணவர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்தவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த மாணவரின் சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய மாணவர் காயமடைந்ததுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles