தேசிய வைத்தியசாலையில் தொலைக்காட்சிப் பெட்டிகள் திருட்டு

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவில் இருந்த 41 அங்குல இரண்டு தொலைக்காட்சிப் பெட்டிகள் காணாமல் போயுள்ளதாக மருதானை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

இது தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் குமார விக்ரமசிங்க கருத்து தெரிவிக்கையில், இரண்டு தொலைக்காட்சிப் பெட்டிகளும் காணாமல் போனது தொடர்பாக உள்ளக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பொலிஸிலும் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது .

இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்த விக்ரமசிங்க, நோயாளர்களின் உடமைகள் மற்றும் பல்வேறு உபகரணங்கள் காணாமல் போனமை தொடர்பில் முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles