வடக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டியது அவசியம் என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார்.
வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு முரண்பாடற்ற வகையில் வெளிப்படைத் தன்மையுடன் தீர்வு காண அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியது அவசியமாகும் என தெரிவித்த அமைச்சர், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அரசு பொறுப்புடன் செயற்படும் போது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சில ஆதரவாளர்களை வைத்துக் கொண்டு அதற்கு தடையேற்படுத்தும் வகையில் செயற்பட்டமை கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.










