தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா , இலங்கைக்கு குறுகிய கால பயணமொன்றை மேற்கொண்டார்.
இந்தோனேசியாவில் இடம்பெற்ற G20 மாநாட்டில் கலந்துகொண்ட பின்னர் அவர் இலங்கைக்கு வருகை தந்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த பின்னர் நாடு திரும்பியுள்ளார்.
கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
தென்னாபிரிக்க ஜனாதிபதிக்கு இன்று பிறந்தநாள். இதனைமுன்னிட்டு கேக் வெட்டப்பட்டு, கொண்டாட்டமும் இடம்பெற்றது.
