கனடாவை வீழ்த்தியது பெல்ஜியம்!

22 ஆவது உலகக்கிண்ண கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று அதிகாலை நடைபெற்ற குரூப் எப் பிரிவு லீக் ஆட்டத்தில் பெல்ஜியம், கனடா அணிகள் மோதின.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே பெல்ஜியம் வீரர்கள் பொறுப்புடன் ஆடினர். ஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் மிக்கி பட்ஷியாய் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

இதனால் முதல் பாதி ஆட்டத்தில் பெல்ஜியம் 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. ஆட்டத்தின் முடிவில், பெல்ஜியம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Related Articles

Latest Articles