பதுளை மாவட்ட தமிழ் மொழி மூலமான பாடசாலைகளின் குறைநிறைகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டமொன்று கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் தலைமையில் நாளை (26.11.2022) சனிக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு பதுளை சரஸ்வதி தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
மேற்படி கூட்டத்தில் தமிழ்மொழி மூலமான பாடசாலைகளின் குறைநிறைகளைப் பற்றியும், கல்வி வளர்ச்சியை மேலும் வலுப்படுத்திக்கொள்ளும் நோக்கிலும், இச்சந்திப்பு அமையுமென அமைச்சின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இக்கூட்டத்தில் பதுளை மாவட்ட தமிழ் மொழி மூலமான பாடசாலைகளின் அதிபர்கள் உட்பட கல்வியலாளர்கள் கலந்து கொண்டு கருத்துப்பரிமாறல்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் பூரண ஆதரவோடு மலையக மக்களின் கல்வி வளர்ச்சியில் விசேட கவனம் செலுத்தி, பல புதிய திட்டங்களை முன்னெடுக்க இராஜாங்க அமைச்சர் தயாராகி வருகின்றனர்.










