சுமார் ஐந்தரை லட்சம் ரூபா பெறுமதியான மின் உபகரணங்களை களாவடிய நால்வரை பசறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
45, 47, 49 மற்றும் 54 வயது வயதுடைய நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மௌசாகலை பகுதியில் வீடொன்றின் பின்புறமாக நுழைந்து வீட்டில் உள்ள LED தொலைக்காட்சி, மின்அரைப்பான் , முற்கால சில்லறை நாணயங்கள் ஆகிய வற்றை திருடிய குற்றச்சாட்டில் மௌசாகலை பகுதியைச் சேர்ந்த இருவரும் மேலும் சீமெந்து கல் உற்பத்தி செய்யும் இயந்திரத்தில் உள்ள மின் இயந்திரங்கள் இரண்டையும் பித்தளை கம்பிகளையும் திருடிய குற்றச்சாட்டில் மேலும் இருவருமாக மொத்தமாக மௌசாகலை பகுதியைச் சேர்ந்த நால்வர் பசறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா
