மாத்தளை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் போது தங்க முலாம் பூசப்பட்ட சிறிய புத்தர் உருவச்சிலை ஒன்றுடன் ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் உக்குவள உள்பதபிட்டிய ரைத்தலாவெல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின் சுற்றி வளைப்பின்போது 11 மில்லி மீட்டர் உயரம் கொண்ட மிகவும் பழைமை வாய்ந்த புத்தர் உருவச்சிலை மற்றும் பித்தளை ஆபரணம் பெட்டியொன்றும் இவர்களிடமிருந்து மீட்கப்பட்டது. மேலும் பச்சை, சிவப்பு, நீலம் நிறம் கொண்ட பத்து கற்கள் உட்பட பூஜை பொருட்கள் சிலவற்றையும் கண்டெடுத்துள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை, ரைத்தலாவெல, மஹவெல, அரநாயக்க ஆகிய பிரதேசங்களை சேர்ந்த சந்தேக நபர்கள் ஐவரையும் மாத்தளை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி வரை இவர்களை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
