தென்கொரியாவை வீழ்த்தியது கானா!

கானா அணி 3-2 என்ற கோல் கணக்கில் தென்கொரிய அணியை வீழ்த்தியது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கிண்ண கால்பந்து போட்டி 1930 ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த 20 ஆம் திகதி கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரில் இன்று லீக் ஆட்டத்தில் தென்கொரியா, கானா அணிகள் மோதின. ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். ஆனாலும் 3 இற்கு 2 என்ற அடிப்படையில் கானா அணி வெற்றிபெற்றது.

Related Articles

Latest Articles