” இலங்கை முதலீடுகளை மேற்கொள்வதற்குப் பொருத்தமான நாடு”

இலங்கை முதலீடுகளை மேற்கொள்வதற்குப் பொருத்தமான நாடு என்பது உலகத்துக்குக் காண்பிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்தார்.

இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கும் அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு முதல் தடவையாக பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தலைமையில் கூடியபோதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

இந்நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை போக்குவதற்கு அந்நிய செலாவணியை பெறுவது அவசியமானது எனவும், அதற்காக இந்நாட்டில் முதலீடுகள் மற்றும் வர்த்தகங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டுமெனவும் தலைவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, இலங்கை முதலீடு செய்வதற்கு ஏற்ற நாடு என்பதை உலகத்துக்கு எடுத்துக் கூற வேண்டும் என்றும், அதற்குத் தேவையான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த முதலீட்டு மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான ஆலோசனைகளை அந்தந்தத் துறையைச் சார்ந்த நிபுணர்களிடமிருந்து குழுவுக்குப் பெற்றுக் கொள்வது முக்கியம் என்றும் தலைவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்தில் இந்தப் பிரேரணைகளை முன்வைப்பதற்குத் தேவையான வழிமுறைகளை ஊடகங்கள் மூலம் அறிவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

மேலும், இந்நாட்டில் முதலீடு செய்ய வரும் முதலீட்டாளர்களுக்கு தேவையான அனுமதிகளைப் பெறுவதற்கு ஒரு நிறுவனத்தை அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. பல்வேறு இடங்களுக்குச் சென்று பெறவேண்டிய அனுமதி பெறுதல் உள்ளிட்ட செயற்பாடுகளை ஒரே இடத்தில் இலகுவாகப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும் என்பது குழுவின் கருத்தாக இருந்தது.

அத்துடன், முதலீட்டாளர்களுக்குத் தேவையான ஒத்துழைப்பைப் பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி செயலகத்தில் தனியான இடமொன்றை ஒதுக்குவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. முன்னுரிமையின் அடிப்படையில் அவசியமான திட்டங்கள் சிலவற்றை அடையாளம் கண்டு அந்தந்தத் துறையை விரைவில் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இதன்படி, இந்த விடயத்தில் வெளிநாடுகள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதை ஆய்வு செய்து குழுவின் எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் இக்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே மேலும் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles