பலாங்கொடை பிரதேசத்தில் போஷாக்கின்மையால் 11 குழந்தைகள் பாதிப்பு

பலாங்கொடை கல்தொட்ட பிரதேச செயலகப் பிரிவிலுள்ள விவசாய குடியேற்ற பகுதியில் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள 11 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பலாங்கொடை பிரதேச சபைத் தலைவர் சுனில் பேமசிறி பிரதேச சபை மாதாந்த கூட்டத்தில் தெரிவித்தார்.

பலாங்கொடை கல்தொட்ட விவசாய குடியேற்ற பகுதியில் இவ்வாறு போஷாக்கு இன்மையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இனம் காணப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.

எனவே இது சம்பந்தமாக கூடிய கவனம் செலுத்தப்படுவதுடன் உடனடியாக இது விடயமாக உரிய அதிகாரிகளை அறிவுறுத்தி வைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

Latest Articles