ஹம்பர்க் துறைமுக ஒப்பந்தத்தில் சீனாவின் முதலீட்டைக் குறைக்க ஜெர்மனி ஒப்புதல் அளித்துள்ளது

பெய்ஜிங்கின் அரசியல் தந்திரோபாயங்கள், நாடுகளின் தேசிய பாதுகாப்புக்கு பரவலாக அச்சுறுத்தலாகக் காணப்பட்டதால், சர்ச்சைக்குரிய ஹாம்பர்க் துறைமுக ஒப்பந்தத்தில் சீனக் கப்பல் குழுவான COSCO சிறிய பங்குகளையே எடுக்க அனுமதிக்க சீனா மற்றும் ஜெர்மனியின் அரசாங்க அமைச்சர்கள் ஒரு சமரச ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட பொலிட்டிகோ என்ற பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் சர்ச்சைக்குரிய ஹாம்பர்க் துறைமுகத்தின் டெர்மினல் ஒன்றில் சீன நிறுவனத்தை பங்குகளை எடுக்க அனுமதித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஒப்புதலுக்கு பல அமைச்சகங்கள் அதிருப்தி வெளியிட்ட போதிலும் ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற முயன்றதாக பல ஊடக அறிக்கைகள் வெளிப்படுத்தியதை அடுத்து இந்த முடிவு வெளிவந்துள்ளது.

இறுதி ஒப்புதலுக்குப் பிறகு, டெர்மினலை இயக்கும் கப்பல் நிறுவனத்தில் 35 சதவீதத்திற்குப் பதிலாக சீன நிறுவனமான COSCO 24.9 சதவீதத்தை மட்டுமே வாங்க அனுமதிக்கும் என்று பொலிட்டிகோ தெரிவித்துள்ளது.

உலக வல்லரசாக உருவெடுக்கும் சீனாவின் வேட்கை மேற்கு நாடுகளிடையே பாதுகாப்புக் கவலையைத் தூண்டியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக உணர்ச்சிபூர்வமாக்கியுள்ளது.

HHLA இன் செய்தித் தொடர்பாளர் Hans-Jorg Heims, தனது நிறுவனம் “ஜெர்மன் அரசாங்கத்துடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது” என்றார்.

காஸ்கோவின் பங்குகளை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் விவாதிக்கப்பட்டதாக ஹெய்ம்ஸ் கூறினார். பொலிட்டிகோவின் படி, முதலீட்டை மறுபரிசீலனை செய்வதற்கான சட்டப்பூர்வ காலக்கெடு முடிவதற்குள் இறுதி சமரசம் எட்டப்படும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.

குறிப்பிடத்தக்க வகையில், Rotterdam மற்றும் Antwerp இல் உள்ள ஐரோப்பாவின் இரண்டு பெரிய துறைமுகங்களில் சீன நிறுவனமான COSCO ஏற்கனவே பங்குகளைக் கொண்டுள்ளது.

இது ஏதென்ஸில் உள்ள Piraeus துறைமுகத்தையும் கட்டுப்படுத்துவதோடு Duisburg இல் ஒரு உள்நாட்டு இரயில் முனையத்தை விரிவுபடுத்துவதற்கான திட்டங்களைத் தொடங்க தயாராக உள்ளது.

Related Articles

Latest Articles