கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 6,000 பேர் சகல பாடங்களிலும் சித்தியடையவில்லையென்பதை சுட்டிக்காட்டிய கல்வி அமைச்சர், இம்மாணவர்கள் தொடர்பில் யார் பொறுப்புக் கூறுவதென சபையில் கேள்வி எழுப்பினார்.
11 வருடங்களாக பாடசாலையில் கல்வி கற்று க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றி பரீட்சையில் அவர்கள் சித்தி யடையவில்லையென்றால் எவரும் அது தொடர்பில் பொறுப்பேற்பதில்லையென்றும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
நிலுவைச் சம்பளம், ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் குரல் எழுப்புபவர்கள் 42 இலட்சம் மாணவர்கள் தொடர்பில் குரல் எழுப்புவதில்லை என்றும் அவர் சபையில் தெரிவித்தார்