உள்ளூராட்சி தேர்தலில் சேவல் சின்னத்தில் களமிறங்குவது குறித்து இ.தொ.கா. ஆராய்வு!

2023 பெப்ரவரி மாதத்துக்குள் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறும் ன எதிர்பார்க்கப்படும் நிலையில், அத்தேர்தலில் தனித்து சொந்த சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தெரியவருகின்றது.

2018 இல் நடைபெற்ற உள்ளூராட்சிமன்ற தேர்தலிலும் சேவல் சின்னத்தில் களமிறங்கி, நுவரெலியா மாவட்டத்தில் மகத்தான வெற்றியை காங்கிரஸ் பெற்றிருந்தது.

இந்நிலையிலேயே இம்முறையும் தனித்து களமிறங்குவதற்கான சாத்தியப்பாடுகள் பற்றி தற்போது ஆராயப்பட்டுவருகின்றது.

நுவரெலியா மாவட்டத்துக்கு அப்பால் பதுளை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு மற்றும் வன்னியிலும் தனிவழி செல்வது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டுவருவதாக கட்சி உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Articles