சுற்றுலா சென்றவர்கள் மீது குளவிக்கொட்டு – 20 பேர் பாதிப்பு

ஹப்புத்தளை,  தம்பேதன பகுதிக்கு சுற்றுலா வந்த 20 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

மட்டக்களப்பு மற்றும் இரத்தினப்புரி பகுதிகளைச் சேர்ந்த 20 பேரே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகி,  ஹப்புத்தளை பங்கட்டி வைத்தியச்சாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இன்று முற்பகல் 11.30 மணியளவிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

8 பெண்கள்,  10 ஆண்களும் மற்றும் இரு சிறார்கள் என மொத்தம் 20 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles