பசறையில் பலத்த காற்று – கூரைகள் அள்ளுண்டுச்சென்றன – மரங்கள் முறிவு! போக்குவரத்தும் தடை

பதுளை, பசறை பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக சில அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன.

பல குடியிருப்புகளில் கூரைத்தகடுகள் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளன.

குறிப்பாக பசறை –  பண்டாரவளை வீதியில் நமுனுகுலை 12 ஆம் கட்டைப் பகுதியில்,   வீதியோரங்களில் உள்ள மரங்கள் முறிந்து வீதியில் வீழ்ந்தமையினால் வீதி போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.  ஏனைய சில பகுதிகளிலும போக்குவரத்து தடைபட்டுள்ளது. மின்தடையும் ஏற்பட்டுள்ளது.

மலர்வேந்தன், ராமு தனராஜ்

Related Articles

Latest Articles