கண்டி மாவட்ட தமிழ்ப் பிரதிநிதித்துவம் அவசியம் – மனோ தெரிவிப்பு

” கண்டி மாவட்டத்தில் நானும் களமிறங்கினேன், பல சவால்கள் இருந்தன. அவற்றை எதிர்கொண்டேன். தோல்வி என்பதைவிட தோற்கடிக்கப்பட்டேன். இந்நிலையில் சுமார் 20 வருடங்களுக்கு பிறகே கண்டி மாவட்டத்துக்கு தமிழ்ப் பிரதிநிதித்துவம் கிடைத்தது, அந்த பிரதிநிதித்துவம் மக்களுக்கு அவசியம். அதனை இல்லாது செய்வதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை. அவர் (வேலுகுமார்) சுயாதீனமாகவாவது இருந்துவிட்டு போகட்டும். தமிழ் முற்போக்கு கூட்டணியில் இருந்து வேலுகுமார் வெளியேற்றப்படவில்லை. இடைநிறுத்தப்பட்டுள்ளார்.”

இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி என்பவற்றின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

‘சூரியன்’ வானொலியில் தற்போது ஒலிபரப்பாகும் ‘விழுதுகள்’ அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்று, சிரேஷ்ட ஊடகவியலாளர் ப. விக்னேஸ்வரனால், வேலுகுமார் எம்.பியின் ‘நடுநிலை’ போக்கு மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பம் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே மனோ கணேசன் இவ்வாறு குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles