அரசியலமைப்பு பேரவையூடாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அதிகாரப்பகிர்வை அணுகுவரென்பதாலேயே, கூட்டமைப்பினரது பெயர் பரிந்துரையை எதிர்த்ததாகவும், கூட்டமைப்பினர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிநிதிகளல்லவெனவும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர் நியமனம் தொடர்பில் வினவியபோதே மேற்கண்டவாறு அவர், குறிப்பிட்டார்.
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு இரு மாதங்கள் நிறைவுற்றுள்ளது. எனினும், அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர் நியமனம் இன்னும் இழுபறியிலேயே உள்ளது. உறுப்பினர் நியமனத்தில் அரசியல் கட்சிகளுக்கிடையில் கருத்தொற்றுமை கிடையாது. பெரும்பான்மைவாதத்தை தக்கவைத்துக் கொள்ளவும், சிறுபான்மையினத்தவர்களுக்கு இடமளிக்கக் கூடாதென்பதற்காகவுமே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரின் பெயர் பரிந்துரையை,நாம் எதிர்த்ததாக கூறுவது அடிப்படையற்றது.
அரசியலமைப்பு பேரவைக்கு சுயாதீன தரப்பினர் ஒருவரின் பெயரை பரிந்துரைக்க நாங்கள் ஆரம்பத்தில் தீர்மானிக்கவில்லை.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாட்டு மக்களுக்கு எவ்வித நிவாரணத்தையும் வழங்கவில்லை எனத் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வரவு செலவுத் திட்ட மீதான விவாதத்தில் சுட்டிக்காட்டி,அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளை விமர்சித்தனர்.










