சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்களுக்கும், அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஜே.வி.பியினருக்கும் இடையில் கடும் சொற்போர் மூண்டுள்ளது.
அரசியல் களத்தில் கடந்த சில வருவடங்களாக பொது இணக்கப்பாட்டுடன் பயணித்த இவ்விரு தரப்பினரும், தற்போது மோதிக்கொள்வது மொட்டு கட்சியை குஷிப்படுத்தியுள்ளது.
பாடசாலைகளுக்கு ‘பஸ்’ வழங்கும் வேலைத்திட்டத்தை சஜித் முன்னெடுத்துவரும் நிலையில், ‘பஸ் மேனால்’ நாட்டை ஆளமுடியாது என்ற விமர்சனத்தை ஜே.வி.பி. முன்வைத்தது.
அத்துடன், ராஜபக்ச, ரணில், சஜித் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்ற தொனியிலும் பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதற்கு பதிலடி கொடுத்த சஜித், ஜே.வி.பியின் போலி சமத்துவவாதிகள், மாணவர்களை வீதிக்கு இறக்கி அரசியல் பிழைப்பு நடத்துபவர்கள், அவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் படிக்கின்றனர், அவர்கள் அணியும் ஆடைகளில் விலையோ ஏராளம் என்றெல்லாம் ஜே.வி.பியின் அந்தரங்க விடயங்களை அம்பலப்படுத்திவருகின்றார். சஜித்தின் சகாக்களும் விளாசித்தள்ளிவருகின்றனர்.
