இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் நடத்தப்படும் தைப்பொங்கல் நிகழ்வுகள் இம்முறை இடம்பெறமாட்டாதென காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்.பி. தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலமை காரணமாகவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தைபொங்கல் நிகழ்வுக்காக செலவழிக்கப்படும் பணம், மலையக மாணவர்களின் நலனுக்காகவும், கல்வி வளர்ச்சிக்கும், அதனோடு மலையக மக்களின் நிவாரண திட்டத்திற்கும் பயன்படுத்தப்படும் எனவும் ஜீவன் குறிப்பிட்டுள்ளார்.
