ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச, இன்று முற்பகல் ஆன்மீக வழிபாட்டுடன் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,
” உள்ளாட்சிசபைத் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் தனித்தனியாகக் போட்டியிடுகிறோம். 252 உள்ளூராட்சிகளில் நேரடியாக மொட்டு அடையாளத்துடன் போட்டியிடுகிறோம். இன்னும் சில வேறு சில சின்னங்களில் உள்ளன. யாழ்ப்பாணத்தில் வீணையுடன் போட்டியிடுகிறது, மட்டக்களப்பு படகு, குதிரை ஆகியவற்றுடனும் களமிறங்குகின்றோம்.” – என்றார்.