கம்பளை – நாவலப்பிட்டிய பிரதான வீதியில் எக்கால பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.
கம்பளை, வெலம்பொட பிரதேசத்தைச் சேர்ந்த 19 மற்றும் 20 வயதுகளுடைய இரு இளைஞர்களே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
நாவலப்பிட்டியவில் இருந்து வெலம்பொட நோக்கி இரு இளைஞர்களும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருக்கையிலேயே காருடன் மோதுண்டு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
