நாளை சபை அமர்வை புறக்கணிக்க சஜித், டலஸ் முடிவு! மனோ, ஹக்கீம், ரிஷாட் பங்கேற்பு!

எதிர்வரும் 08 ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வை புறக்கணிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க நேற்று இந்த தகவலை வெளியிட்டார்.

அத்துடன், டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையும் குறித்த அமர்வை புறக்கணிக்கவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணித்தாலும் அதன் பங்காளிக்கட்சிகளான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், முற்போக்கு கூட்டணி, மக்கள் காங்கிரஸ் என்பன பங்கேற்கவுள்ளன.

9 ஆவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத்தொடரை எதிர்வரும் 08 ஆம் திகதி ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கின்றார். அன்று ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையும் இடம்பெறும்.

Related Articles

Latest Articles