இரத்தினபுரியில் கழிவுகளால் நீர்நிலைகளுக்கு பாதிப்பு

இரத்தினபுரி நகரப்பிரதேசங்களில் கழிவுகளால் நீர்நிலைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வீடுகள், வியாபார நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்படும் மலசலகூட கழிவுகள் பிரதேச நீர்நிலைகளுக்கு விடப்படுவதாக பிரதேசவாசிகள் முறையிடுகின்றனர்.

இப்பிரதேசத்தில் பெரும்பாலானவர்களுக்கு மலசலகூட வசதி இருந்தும் அவை நிறைந்த பின்னர் அவற்றை முறையாக நீக்காது இந்நீர்நிலைகளுக்குத் திறந்து விடுவதால் பெரும் சுகாதார அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். பெரும்பாலானவர்கள் மலசல கூட கழிவுகளை களுகங்கைக்கு திருப்பி விடுவ தாலும் இந்நிலைமை உருவாகி வருவதாக கவலை தெரிவிக்கப்படுகிறது.

எனவே அரச அதிகாரிகள் மேற்படி மலசலகூட பிரச்சினைகளை இனங்கண்டு கழிவுகளை அகற்றுவதற்கான வழிமுறைகளை ஒழுங்கு படுத்திக் கொடுப்பதுடன் சட்டதிட்டங்களை மீறும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Related Articles

Latest Articles