பெற்ற மகளை யாரோ போல தத்தெடுத்த பெற்றோர்! நடந்தது என்ன ?

பெற்ற மகளை வேறு எவரோ போல ஆதரவற்ற காப்பகத்தில் இருந்து தத்தெடுத்திருக்கிறார்கள் ஃபின்லாந்தை சேர்ந்த பெற்றொர். மருத்துவமனையின் அலட்சியத்தால் நடந்த சம்பவம் குறித்து செயின்ட் ஸோ என்பவர் பகிர்ந்த ட்விட்டர் பதிவுதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், 5 ஆண்டுகளாக தான் வளர்த்த பெண் குழந்தை தன்னுடைய மகள் இல்லை என சந்தேகித்து முதலில் சோதனை செய்து பார்த்ததில் தனது மகள் இல்லை என்றதும் மனைவி மீது சந்தேகித்திருக்கிறார். இதனையடுத்து அந்த பெண்ணும் சோதனை செய்ததில் அவருக்கும் அந்த குழந்தை தனது மகளே இல்லை என்ற அதே முடிவே வந்திருக்கிறது.

இதனையடுத்து பிரசவம் பார்த்த மருத்துவமனைதான் இதற்கெல்லாம் காரணம் என கண்டறிந்து அந்த மருத்துவமனை மீது வழக்கும் தொடர்ந்த அந்த தம்பதி. அதன்படி பிரசவத்தின் போது பெண் குழந்தைகளை மாற்றி வைத்ததே இதற்கெல்லாம் காரணமாக இருந்திருக்கிறது. வழக்கை விசாரித்ததில் குற்றத்தை ஒப்புக்கொண்ட அந்த மருத்துவமனை நிர்வாகம் 2 மில்லியன் டாலர் இழப்பீடாக கொடுத்திருக்கிறது.

இந்த நிலையில் வழக்கு தொடர்ந்த தம்பதி அவர்களது உயிரியல் ரீதியான மகளை தேடும் பணியையும் தொடங்கியிருக்கிறார்கள். அதில் கைமாறிச் சென்ற அவர்களது பெண் குழந்தையை வளர்த்த அந்த பெற்றோர் பராமரிப்பு இல்லத்தில் விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

இதனால் வேறு வழியே இல்லாமல் பெற்ற மகளையே வேறு யாரோ போன்று தத்தெடுத்திருக்கிறார்கள். பெற்ற மகளை தத்தெடுத்ததோடு இத்தனை ஆண்டுகளாக வசித்து வந்த அந்த பகுதியைவிட்டே மாறிச் சென்றிருக்கிறார்கள் என்றும் செயின்ட் ஸோ பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Related Articles

Latest Articles