வீட்டுக்கு முன்னாலிருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து ஆண் குழந்தையொன்று பலியான பெருந்துயர் சம்பவம், கரந்தெனிய,மாகொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மினோத் என்ற 3 வயது குழந்தையே இவ்வாறு பலியாகியுள்ளது.
வீட்டு வளாகத்தில் நேற்று மாலை குறித்த சிறுவன் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். திடீரென காணாமல்போன நிலையில், அவரை உறவினர்கள் தேடியுள்ளனர்.
இந்நிலையிலையே வீட்டுக்கு முன்னால் பாதுகாப்பற்ற வகையில் இருந்த கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
