பேச்சுவார்த்தைக்கு பிறகு வேலை நிறுத்தத்தை கைவிட்ட இயந்திர சாரதிகள்

இன்று முற்பகல் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுத்த இயந்திர சாரதிகள் அதிகாரிகளுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து தமது பணிப்புறக்கணிப்பை வாபஸ் பெற்றுள்ளனர்.

பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டதன் பின்னர் தமது உறுப்பினர்கள் பணிக்கு சமூகமளிப்பார்கள் என புகையிரத இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று காலை என்ஜின் சாரதிகள் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை காரணமாக பல ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டன.

பிரதான, கரையோர மற்றும் புத்தளம் பாதைகளில் இதுவரை 10 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

கடந்த வாரம், ரயில்வே திணைக்களத்திற்கு உயர் அதிகாரி ஒருவரை நியமித்தல், மேலதிக நேர கொடுப்பனவுகள் மற்றும் பதவி உயர்வு தொடர்பான விடயங்களை அடிப்படையாக கொண்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கங்கள் அச்சுறுத்தின.

Related Articles

Latest Articles