ஈரானின் திருத்தப்பட்ட அமைதித் திட்டத்தை அமெரிக்காவிடம் பகிர்ந்தது பாகிஸ்தான்!

மேற்கு ஆசியா​வில் நடந்துவரும் போரை முடிவுக்​குக் கொண்டு வரு​வதற்​காக, ஈரானின் திருத்தப்பட்ட புதிய அமை​தித் திட்​டம் அமெரிக்காவிடம் சமர்ப்பிக்​கப்​பட்​டுள்​ளது.

தற்​போது தற்​காலிகப் போர்​நிறுத்​தம் அமுலில் உள்ள நிலை​யில், இரு நாடு​களுக்​கும் இடையே முக்​கிய தூத​ராகச் செயல்​பட்டு வரும் பாகிஸ்​தான் மூல​மாக இந்​தத் திட்​டம் பகிரப்பட்டுள்ளது.

போரை முடிவுக்​குக் கொண்டு வர ஈரான் விருப்​பம் தெரி​வித்​துள்ள நிலை​யில், அமெரிக்கா அனுப்​பிய புதிய அமை​தித் திட்​டத்​திற்கு ஈரான் பதிலளித்​துள்​ளது.

அமெரிக்​கா​வின் கோரிக்​கைகள் மிக அதி​க​மாக இருப்​ப​தாக ஈரானிய ஊடகங்​கள் தெரி​வித்த போதி​லும், இரு தரப்​பும் தொடர்ந்து தகவல்​களைப் பரி​மாறி வரு​வ​தாகக் கூறப்​படு​கிறது.

அமெரிக்கா விதித்​துள்ள நிபந்​தனை​களில், ஈரானுக்கு போர்க்​கால இழப்​பீடு எது​வும் வழங்​கப்பட மாட்​டாது மற்​றும் அந்​நாடு ஒரே ஒரு அணுசக்தி நிலை​யத்தை மட்​டுமே கொண்​டிருக்க அனு​ம​திக்​கப்​படும் என்​பவை அதில் முக்​கிய​மானது என்று ஈரானின் பார்ஸ் செய்தி நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது.

இதற்​கிடை​யில், கடந்த ஞாயிறன்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஈரானுக்​குக் கடுமை​யான எச்​சரிக்கை ஒன்றை விடுத்​திருந்​தார்.

‘‘ஈரானுக்​குக் காலம் கடந்து கொண்​டிருக்​கிறது. அவர்​கள் வேக​மாகச் செயல்​படு​வது நல்​லது, இல்​லை​யெனில் அவர்​களுக்கு எது​வுமே எஞ்​சி​யிருக்​காது. நேரம் மிக​வும் முக்​கிய​மானது!’’ என்று ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்​தில் பதி​விட்​டிருந்​தார்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles