உள்ளாட்சிசபைத் தேர்தலை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வலியுறுத்தி எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பில் பாரியதொரு போராட்டத்தை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
இதன்படி நிதி அமைச்சுக்கு முன்பாகவும், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகவும் போராட்டம் நடத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர மேயர் வேட்பாளர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.
” தேர்தலை நடத்தாமல் இந்த அரசால் முன்னோக்கி செல்ல முடியாது. எனவே, தேர்தல் நடத்தப்பட வேண்டும். திங்கள் கொழும்பை சுற்றிவளைப்போம்.” – எனவும் முஜிபூர் ரஹ்மான் கூறினார்.










