ரயில் மோதி இரு பிள்ளைகளின் தாயொருவர் இன்று காலை பலியாகியுள்ளார் என வாத்துவ பொலிஸார் தெரிவித்தனர்.
தனியார் நிறுவனமொன்றில் வேலைக்குச் செல்வதற்காக ரயில் ஏற வந்த வஸ்கடுவ, சிரில் மாவத்தையைச் சேர்ந்த சி.டி.சமரவீர முதலிகே சிந்தா பிரியதர்ஷனி என்ற 36 வயதுடைய தாயே இவ்வாறு பலியாகியுள்ளார்.
மருதானை நோக்கிச் செல்லும் ரயிலில் பயணிக்க வந்த அவர், கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த 940 இலக்க ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
