அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி முகவர் அமைப்பின் (USAID) தலைவராக செயற்படும் சமந்தா பவர், உலக வங்கியின் அடுத்த தலைவராக நியமிக்கப்படலாம் என தெரியவருகின்றது.
உலக வங்கியின் தற்போதைய தலைவர் டேவிட் மல்பாஸ், தனது பதவியை திடீரென இராஜினாமா செய்ததை தொடர்ந்து, அப்பதவிக்கு சமந்தா பவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சமந்தா பவர், சிறந்த இராஜதந்திரி என்பதுடன், ஊடகத்துறையிலும் பணியாற்றியவர்.
ஒபாமா ஆட்சிகாலத்தில், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதராக பணியாற்றினார். இலங்கை விவகாரத்திலும் இவருக்கு அனுபவம் உள்ளது.
