Facebook மற்றும் Instagram பயனர்களுக்கு தமது சமூகவலைத்தள கணக்கை அதிகாரப்பூர்வமானது என உறுதி செய்யும் ‘புளு டிக்’ இற்கு கட்டண முறையை ‘Meta’ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
ஆஸ்திரேலிய , நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இவ்வாரம் குறித்த நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதன்படி இணையத்தள பயனர்களுக்கு மாதாந்தம் 11.99 டொலர்களும், ஐபோன் பயனர்களுக்கு மாதாந்தம் 14.99 டொலர்களும் அறவிடப்படவுள்ளது.
” இந்த நடவடிக்கை சமூக ஊடக செயலிகளின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதாக அமையும்.” என்று ‘Meta’ தலைமை நிறைவேற்றுனர் மார்க் சக்கர்பேர்க் அறிவித்துள்ளார்.