வீட்டை உடைத்து 16 பவுன் நகை கொள்ளை!

யாழ்., கட்டப்பிராயில் வசித்துவரும் ஓய்வுபெற்ற ஆசிரியரின் வீடு உடைத்து 16 பவுண் நகை களவாடப்பட்டுள்ளது என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர் இரண்டு நாள்களாக வீட்டில் இல்லாத தருணத்தை அவதானித்து கதவை உடைத்து உள்புகுந்த திருடர்கள் 16 பவுண் நகைகளைக் களவாடிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்று கோப்பாய் பொலிஸார் இன்று ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles