12 வயது சிறுமிமீது வன்கொடுமை – சித்தப்பாவுக்கு மறியல்

12 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய அவரின் சிறிய தந்தையை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெப்பித்திக்கொல்லாவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் ஹொரவபொத்தான- ஒலுகஸ்கட பகுதியைச் சேர்ந்த ஜயசூரிய ஆராய்ச்சிலாகே சமன் ஸ்ரீ (45வயது) என பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை -மஹதிவுல்வெவ, திம்பிரிவெவ பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி தனது தாயாருடன், சிறிய தந்தையின் வீட்டுக்கு கடந்த 2022- 9ஆம் மாதமளவில் சென்றுள்ளார். இதன்போதே சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் வயிற்று வலி காரணமாக மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சிறுமியை விசாரணை செய்த போது சிறிய தந்தையினால் கற்பழிக்கப்பட்டமை தெரிய வந்துள்ளது.

சிறுமியை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அவர் கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது.

சிறுமி வழங்கிய வாக்குமூலத்தை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

Related Articles

Latest Articles