2035இல் உலகில் பாதி மக்களின் எடை அதிகம்

உலக மக்களில் பாதிக்கும் அதிகமானோர் 2035ஆம் ஆண்டுக்குள் உடற்பருமன் அல்லது கூடுதல் எடை மிக்கவர்களாக இருப்பார்கள் என்று அறிக்கை ஒன்று குறிப்பிட்டுள்ளது. இது 4 பில்லியனுக்கும் அதிகமானோருக்குச் சமம்.

பிள்ளைகளிடையே உடற்பருமனாக உள்ளோர் வீதம் அதிகரிப்பதாக உலக உடற்பருமன் சம்மேளனம் குறிப்பிட்டது. ஏழை நாடுகளிலும் அந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நிலைமை கடுமையாவதற்குள் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சம்மேளனம் வலியுறுத்தியது.

உடற்பருமனால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகள் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். 2035க்குள் ஆண்டுதோறும் 4 டிரில்லியன் டொலர் இழப்பு நேரிடலாம்.

வரும் ஆண்டுகளில் ஆசியா, ஆபிரிக்கா ஆகியவற்றிலுள்ள குறைந்த, நடுத்தர வருமான நாடுகளில், உடற்பருமன் வீதம் கணிசமாக அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

2020ஆம் ஆண்டு நிலவரப்படி 2.6 பில்லியன் பேர் உடற்பருமன் மிக்கவர்களாக உள்ளனர். அது உலக மக்கள்தொகையில் 38 வீதமாகும்.

Related Articles

Latest Articles