தேர்தலுக்கு தயாராகவும் – மாவட்ட தலைவர்களுக்கு மஹிந்த பணிப்பு

” உள்ளாட்சிசபைத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு தயாராகுங்கள்”

இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாவட்ட தலைவர்களுக்கு கட்சி தலைவரான மஹிந்த ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார்.

மொட்டு கட்சியின் விசேட கூட்டமொன்று நேற்று மாலை நடைபெற்றது.

மாவட்ட தலைவர்கள், கட்சியின் பிரதான செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றிருந்தனர். பஸில் ராஜபக்சவும் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போதே தேர்தல் பணியை ஆரம்பிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles