யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் சவுக்கடி கடற்கரையில் நேற்று சுமார் 45கிலோகிராம் கஞ்ஞாவினை கைப்பற்றியுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கிடைக்கப்பெற்ற விசேட புலனாய்வு தகவலுக்கமைய சுழிபுரம் சவுக்கடி கடற்கரையில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே மேற்குறித்த தொகை கைப்பற்றப்பட்டதாகவும் சந்தேக நபர் அற்ற நிலையில் இன்றைய தினம் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதோடு மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்










