கட்சியின் தவிசாளர் பதவிக்கு அரசியல் சார்பற்ற சிவில் சமூக பிரதிநிதியொருவரை நியமிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆராய்ந்துவருகின்றது.
இது தொடர்பில் மொட்டு கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசத்திடம் வினவிய போது, இவ்வாறான ஒருவரை நியமிக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.
அத்துடன், தவிசாளர் பதவிக்கு மேலும் பல வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன எனவும் விரைவில் புதிய தவிசாளர் நியமிக்கப்படுவார் எனவும் அவர் கூறினார்.










