மலையக அரசியல் அரங்கத்தின் சர்வதேச மகளிர் தின விழா ஹட்டனில்

மலையக அரசியல் அரங்கத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தின சிறப்பு உரையரங்கம் ஹட்டன் புகையிரத நிலைய வீதி யில் அமைந்துள்ள CSC மண்டபத்தில் 18/03/2023 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

மலையகப் பெண்கள் அரங்கத்தின் தலைவர் ஆறுமுகம் சந்திர ரேக்கா தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் எழுத்தாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான கோகிலம் சுப்பையா வின் நினைவாக ” வெளிநாட்டில் பணிப்பெண் வேலை : பிரச்சினைகளும் சவால்களும்” ( மலையகப் பெண்களை குறித்த சிறப்புப் பார்வை ) எனும் தலைப்பில் பேராதனைப் பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் கலாநிதி பஸீஹா அஸ்மி பிரதான உரையாற்ற உள்ளார்.

கோகிலம் சுப்பையா அவர்களின் சமூக – இலக்கிய வாழ்க்கைக் குறித்த குறிப்பையும் உரையாளர் பற்றிய அறிமுகத்தையும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா வழங்குவார்.

உரையைத் தொடர்ந்து இடம்பெறும் உரையாடல் அரங்கத்தையும் அவரே நெறிப்படுத்த உள்ளார்.

அடையாளம் காணப்பட்ட பெண் செயற்பாட்டாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

நன்றியுரையை மலையகப் பெண்கள் அரங்கத்தின் செயலாளர் இதயஜோதி வழங்குவதுடன் நிகழ்ச்சிகளை நிஷாந்தினி சரவணகுமார் தொகுத்தளிக்கவுள்ளார்.

Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05
Video thumbnail
மலையகம் நேற்று இன்று நாளை I Shortfilm
06:51

Related Articles

Latest Articles