பசறை 13 ஆம் கட்டை பகுதியில் விபத்து – ஆசிரியர் பலி!

பசறை 13 ஆம் கட்டை பகுதியில் இன்று காலை , காரொன்று சுமார் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தர் ஒருவர் (வயது – 34) பலியாகியுள்ளார்.

ஹொப்டன் கலைமகள் தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றும் இவர், பாடசாலைக்கு செல்ல தயாராகி, தனது காரை வீட்டிலிருந்து வெளியே எடுத்த வேளையே விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது பசறை வைத்தியசாலை பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை மூன்று வருடங்களுக்கு முன் இதே பகுதியில் இதே போன்று காலை வேளையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 13 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

ராமு தனராஜா 

Related Articles

Latest Articles