அமைச்சரவை மாற்றத்தை ஏற்படுத்துமாறு ஜனாதிபதியிடம் மொட்டு கட்சி கோரிக்கை!

அமைச்சரவை மறுசீரமைப்பை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தமது கட்சி கோரிக்கை விடுத்துள்ளது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

அத்துடன், பொருத்தமான நேரத்தில் ஜனாதிபதி இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதாக தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles