நுவரெலியாவில் உள்ள “சைப்ரஸ் மரங்கள்” வெட்டப்படுவதன் பின்னணி என்ன?

“நுவரெலியா நகரிலுள்ள வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த 150 வருடங்ளுக்கு மேலாக பழமை வாய்ந்த நுவரெலியாவின் அழகிற்கு பெருமை தேடி கொடுக்கம்
“சைப்ரஸ்” மரங்கள் விறகிற்காக வெட்டப் படுகின்றன. இதற்கு யார் அனுமதி வழங்கினார்கள் என்பது எவருக்கும் தெரியாமல் உள்ளது.”

இவ்வாறு நுவரெலியா மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் நுவரெலியா சுற்றாடல் பாதுகாப்பு குழு தலைவருமான ஹிந்த தொடம்பேகமகே கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நுவரெலியாவில் கடந்த 150 வருடங்களுக்கு முன் நாட்டப்பட்ட மரங்கள் கடந்த பல நாட்களாக வெட்டப்படுகிறன. இதற்கு யார் அனுமதி வழங்கினார்கள் என்பது தெரியாமல் உள்ளது.

“சைப்ரஸ் ” மரங்களின் கிளைகள் வெட்டப்படுகின்றன எனக் கூறி மரங்கள் மொட்டையாக வெட்டப்படுகின்றன.

இவ்வாறு மரங்கள் வெட்டப்படுவதால் நுவரெலியாவின் இயற்கை அழகிற்கு பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. அத்துடன், சுற்றாடலுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது. காலநிலையிலும் மாற்றங்கள் ஏற்படும் அபாய ம் உள்ளது.

நுவரெலியா நகரிலுள்ள ” சைப்ரஸ்” மரங்களை விறகுக்காக வெட்டுவதற்கு அனுமதித்தது யார்? கிளைகளை வெட்டுகிறோம் என்ற போர்வையில் பல வாரங்களாக மரங்கள் அகற்றப்பட்டுவருகின்றன.

கடந்த காலங்களில் தர்மபால சுற்று வட்டாரத்திற்கு அருகிலுள்ள மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. அந்த இடம் தற்போது தனியார் ஹோட்டல் உரிமையாளரின் வாகன தரிப்பிடமாக மாறியுள்ளது.

நுவரெலியா நகரத்திற்கு செல்லும் பிரதான வீதியில் இரு பக்கங்ளிலுள்ள விலையுயர்ந்த சைப்ரஸ் மரங்களும் காரணமின்றி வெட்டப்படுகின்றன.

நுவரெலியா மாநகரசபையில் நகரை அழகு படுத்துவதற்கான ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் நுவரெலியா நகரிலுள்ள சகல அரச திணைக்களத்திலுள்ள உயர் அதிகாரிகள் அங்கம் வகிக்கின்றனர். அந்த குழுவிலும் அனுமதி பெறாமல் இவ்வாறு மரங்கள் வெட்டப்படுகின்றன. நுவரெலியா நகரத்திற்கு பாதிப்பு ஏற்படுகின்றன. எனவே நகரிலுள்ள மரங்கள் வெட்டப்படுவதை நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனவும் அவர் கூறினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles