இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கும், அவ்வாறாயின் அது சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கும், அடையாளங் காணப்பட்ட நடவடிக்கைகளை துரிதமாக செயற்படுத்துவது தொடர்பில் மேற்பார்வை செய்வதற்குமான பாராளுமன்ற விசேட குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இக்குழு பாரளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷின் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவில் கடமையாற்றுவதற்கு பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (24) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அதற்கமைய, நலின் பிரனாந்து, (டாக்டர்) (திருமதி) சீதா அரம்பேபொல, அ. அரவிந்த் குமார், (திருமதி) கீதா சமன்மலீ குமாரசிங்ஹ, (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே, (டாக்டர்) கயாஷான் நவனந்த, சிவஞானம் சிறீதரன், (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன, (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, (டாக்டர்) உபுல் கலப்பத்தி, கிங்ஸ் நெல்சன், (திருமதி) முதிதா பிரிஸான்தி,
அலி சப்ரி ரஹீம், குமாரசிறி ரத்னாயக்க, (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ, கௌரவ வீரசுமன வீரசிங்ஹ, (திருமதி) மஞ்சுலா திசாநாயக, (பேராசிரியர்) சரித்த ஹேரத், (கலாநிதி) (திருமதி) ஹரினி அமரசூரிய மற்றும் கௌரவ ஜகத் சமரவிக்ரம ஆகியோர் இந்தக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.










