ராதாகிருஷ்ணனுக்கு நாடாளுமன்றில் கிடைத்துள்ள முக்கிய பதவி…!

கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவு செய்யப்பட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் அவரது பெயரை முன்மொழிந்ததுடன், ரோஹிணி குமாரி விஜேரத்ன எம்.பி. அதனை வழிமொழிந்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் குறிப்பிடுகையில்,

முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சராகப் பணியாற்றியுள்ளதால் தனக்கு இத்துறை தொடர்பில் புரிதல் காணப்படுவதாகத் தெரிவித்தார்.

அதனால் இந்தக் குழு ஊடாக மேற்கொள்ள முடியுமான உயர்ந்த சேவையை மேற்கொள்ளத் தான் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அதேபோன்று, இந்தக் குழு பரந்துபட்ட ஒரு துறையை கொண்டுள்ளதால் உயர்கல்வி மற்றும் ஆய்வு பற்றிய உப குழு மற்றும் திறன் விருத்தி மற்றும் தொழிற் பயிற்சி பற்றிய உப குழு ஆகிய இரண்டு உப குழுக்களை நியமிக்க இதன்போது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Related Articles

Latest Articles