அரச ஊழியர்களுக்கான ஏப்ரல் மாத சம்பளமும், கொடுப்பனவுகளும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
அத்துடன், ஓய்வூதியம் மற்றும் சமூர்த்தி உள்ளிட்ட கொடுப்பனவுகளும் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும்.
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, வருடாந்தம் ஏப்ரல் மாத சம்பளம் முன்கூட்டியே வழங்கப்படும். எனினும், தற்போதைய பொருளாதார நெருக்கடியில் அது சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்திருந்தது.
இந்நிலையிலேயே சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழமை போல வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
