அமெரிக்காவில் பாடசாலையொன்றில் 3 மாணவர்கள் உட்பட அறுவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் நாஷ்வில்லே பகுதியிலுள்ள தனியார் பாடசாலையொன்றில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
அவர் ஒரு கைத்துப்பாக்கியுடன் 3 மாணவர்களையும், 3 பெரியவர்களையும் கொன்றதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார் என தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்று வருவது அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
